பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டுக்கு எழுபது பவுன் ஊதியமாகப் பெற்று வந்தனர். ஓர் அடிமை நான்கு பவுன் முதல் நாற்பது பவுன் வரை மதிக்கப்படுவான் ; அஃதாவது விற்கப்படுவான்

எவன் ஒருவன் ஐம்பது டேலண்டுகள் அஃதாவது ஆயிரத்து இருநூறு பவுன் வைத்திருக்கிறானோ அவனைத் தனவான் என்று கருதி வந்தனர். அந்நாளில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிலையே பெரிய நிலையாகக் கருதப்பட்டது. இவ்வாறு கொடுக்கும் சவுக்கார்கள் ஆண்டுக்கு வட்டி மூலம், 1,000 பவுன் சம்பாதித்து வந்தனர். 100க்கு 12வீதம் ஆண்டுக்கொரு முறை வட்டி விதித்து வந்தனர்.

வாணிகம் தடையின்றி நடைபெற வேண்டி இருந்தமையின், ஏதென்ஸ் நகரில் வெளிநாட்டு நாணய மாற்றங்களும் தடையின்றி நடைமுறையில் இருந்து வந்தன. இந்த முறை பெரிதும் கடல் வாணிகம் செய்வோர்க்கே பயன்பட்டது. இது வெளி நாட்டினின்றும் ஏதென்ஸ் நகரில் குடியேறியவர்களுக்கும் அளிக்கப்பட்டஉரிமையாக இருந்தபையினால், அவர்களே அந் நாணய மாற்றத்தைக் கவனித்து வந்தனர்.

கிரேக்கர்கள் பிறநாடு சென்று மீள்வதில் பெரு விருப்புடையவர்கள். பிறநாடு சென்று ஆண்டிருந்த நடை உடைபாவனைகளைக் கண்டறிந்தவர்களாயினும் தம்மினும் நாகரிகத்தில் குறைந்தவர்களைக் கண்டு வெறுத்து வந்தனர். அவர்களோடு உறவாடச் சிறிதும் விரும்பிலர். அவர்களிடையே திருமணம் செய்து கொள்ளவும், பழக்க வழக்கங்