பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதீசீத்தேவர்

567

உய்யவந்ததேவ நாயனார்


  
கானப் பேரூரை வென்றவர். இவர் பாடியனவாக அகத்தில் ஒன்று,
நற்றிணையில் ஒன்று, திருவள்ளுவ மாலையில் ஒன்று ஆக மூன்று பாடல்கள் உள்ளன.

உதீசீத்தேவர் = சைன சமயத்தவர் கி.பி. 14 ஆம் நூற்றாண்டினர். திருக்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்.தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். இவரது திருக்கலம்பக நூலில் சிவபெருமான் செய்த செயல்களை எல்லாம் அருகன் செய்தாகக் கூறியிருக்கும் கருத்து ஊன்றிக் கவனித்தற்குரியது.

உமாபதி சிவாசாரியார் = இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கொற்றவங்குடியில் அந்தணர் மரபில் உதித்தவர். சைவ சந்தானாச்சாரியர் நால்வருள் ஒருவர். இவரது ஞானாசிரியர் மறைஞான சம்பந்தர். இவர் பல நூல்களை இயற்றியவர். சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், நெஞ்சு விடுதூது, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம் முதலிய சைவசித்தாந்த நுாற்களையும், கோயிற் புராணம், சேக்கிழார் புராணம் முதலிய புராண நூற்களையும் செய்தவர். பெளட்கர் ஆகமத்திற்கு உரை கண்டவர். இவர் பெற்றான் சாம்பான் என்னும்
ஆதிதிராவிடனுக்கு இறைவன் கட்டளைப்படி தீட்சை செய்து அவனை முத்திக்கு உரியவனாக்கியவர். முள்ளிச் செடிக்கும் முத்தி கொடுத்ததாகக் கூறுவர். இவரது காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு.

உமறுப் புலவர் = இவர் முஸ்லிம் இனத்தவர். நல்ல தமிழ்ப் புலமையுடையவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த கீழக்கரையில் பிறந்தவர். இவரது தந்தையார் சேகு முதலியார். முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலை என்னும் நூலையும் பாடியவர். இவரது காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

உய்யவந்ததேவ நாயனார் = இவர் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் என்றும் கூறப்படுவார். இவரது ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார். இவரே திருக்களிற்றுப்படியார் என்