பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கோகோ ஆட்டம்




ஆகவே, முடிந்தவரை, திரும்பும் இடமான கம்பத்தின் பகுதிகளுக்குப் போகாமல், இடைப்பட்ட பகுதிகளிலே ஏமாற்றும் வேலையைச் செய்து ஆட வேண்டும்.

9. ஒரு குழு என்றால், அதில் திறமையுள்ள ஆட்டக்காரர்களும் இருப்பார்கள். சற்று மந்தநிலையுள்ள ஆட்டக்காரர்களும் இருப்பார்கள். குழு வெற்றி பெற வேண்டுமானால், அதிகத் திறமைக்கும் மந்த நிலைக்கும், இடைப்பட்ட நிலையில் இருந்து ஆடினால்தான் முடியும். சுமாரான ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு சமாளித்து ஆடுவது சாமர்த்தியமான வேலைதான்.

இங்கு ஒரு முக்கியமான குறிப்பை நாம் கவனித்தாக வேண்டும். சுமாரான ஆட்டக்காரர் ஆட்டமிழந்தாலும் அல்லது சிறந்த கெட்டிக்காரரான ஆட்டக்காரர் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் எதிர்க் குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும் என்பது தானே உண்மை நிலை. ஆக, யாரும் குறைந்த நேரத்தில் வெளியேற்றப்படாமல் ஆட வேண்டும் என்பதைத் தான் இங்கே முக்கியமான குறிப்பாகக் கொள்ள வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையான சுமாரான ஆட்டக்காரர்கள் சீக்கிரம், தொடப்படாமல் இருக்க: கெட்டிக்கார ஆட்டக்காரர்கள் ஒரு சில தந்திர ஆட்ட முறையை மேற்கொள்ள வேண்டும்.

சுமாரான ஆட்டக்காரர்களையே முதலில் தொட்டு வெளியேற்ற விரட்டும் குழு முயற்சி செய்யும். அவ்வாறு அவர்கள் முயற்சி செய்யும்போது, தங்கள் குழு சுமாரான' ஓட்டகாரருக்கும் ஓடுவிரட்டுபவர்க்கும் இடயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/100&oldid=1377481" இலிருந்து மீள்விக்கப்பட்டது