பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 9

'அரசு கட்டிலைப் பிடிக்க ஐந்தாம் படையைப் பிடி’ என்பது அரசியல் வஞ்ச மொழி. இனத்தை அழுத்த மொழியைப் புகுத்து என்பது வாழ்வியலில் கொல்லைப் புற வழி. இதற்குச் சான்றுகளைச் சாரி சாரியாக நிறுத்தலாம். என்றாலும் எடுத்துக் கொண்ட முருகன் தமிழ்த் தெய்வம்' என்னும் ஒன்றில் நடந்த ஒன்றை மட்டும் காணலாம்.

முருகன், கந்தன், குமரன், வேலன், செவ்வேள், செய்யோன் முதலியன அவனுக்கு வழங்கும் தமிழ்ச் சொற்கள். இச்சொற்கள் முருகனைக் குறித்து வழங்கவும், அவனது நினைவை எழுப்பிக் கொள்ளுதற்குக் குழந்தைகளுக்குப் பெயர்களாக இடவும் உள்ளன. இவையிருக்க, சுப்பிரமணியம் என்னும் வடமொழிப் பெயரும் முருகனுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வடமொழிப் பெயர் ஏன் வந்தது? எதற்காக வந்தது? எண்ணிப் பார்ப்பது தவறாகாது. காண்பது ஆகும்.

தமிழ்ச் சொல், பெயர்.

தமிழ்ச் சொற்களுக்குரிய பொருள்களைத் தமிழ்த் தெய்வத் துடன் பொருத்திக் காணவேண்டும், முருகு என்னுஞ் சொல்லுக் குரிய அழகு. இளமை, புதுமை, எழுச்சி ஆகிய பொருள்களுக்குப் பொருத்தமான இயல்புகளும் செயல்களும் கொண்டவனாக முருகனைக் காண்கின்றோம். கந்து என்றால் பற்றுக்கோடு. முருகன் மலைநாட்டுத் தமிழர் வாழ்விற்குப் பற்றுக்கோடாக வாழ்ந்தான். எனவே கந்தன் எனப்பட்டான். கட்டிளமை குமுறும் தன்மையால் குமரன் ஆனான். வேல் என்னும் படை யைக் கொண்டமையால் வேலன் எனப்பட்டான். விரும்பப்படு கின்றவனாகச் சிவந்த நிறத்தனாகையால் செவ்வேள் ஆனான் . செக்கச் சிவந்த உடல் நிறத்தாலும் செம்மைப்பட்ட செயற்பாட் டாலும் செய்யோன் எனப்பட்டான். இவ்வாறு தமிழ்ப் பெயர் களுக்குரிய பொருள்களை விரித்துக் கண்டது போன்றே சுப்பிர மணியம் என்னும் சொல்லின் பொருளையும் காண்பது முறை யாகும். சுப்பிரமணியன் என்றால் என்ன பொருள்? அச்சொல் ஒரு வடமொழிச் சொல் அடைமொழிச் சொல். பிரமணியன்’ என்னுஞ் சொற்கு அடைமொழியாக, "சு முன்னொட்டாக இணைக்கப்பட்டுச் சுப்பிரமணியன்' என்றாயிற்று. வடமொழிப்