பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இன்னைக்கு நரகம்னு உளருதே! உனக்கு என்ன ஆச்சு? மூளை கலங்கிப் போச்சா? மோகினி : உங்களுக்குத்தான் புத்தி பேதலிச்சுப் போச்சு. நான் என் பொறந்த வீட்டுக்குப் போறேன்? சேல்வமணி : ஏன்? மோகினி : ஒரு பொண்ணு பசி பட்டினியா கிடக்கலாம்! பகட்டான உடை கூட தேவையில்லேன்னு வாழலாம். வீடோ வாசலோ, இல்லாம. வீதியிலக் கூட குடும்பம் நடத்தலாம். எப்போ? ஒரு பொண்ணுக்கு புருஷன் ஒழுங்கா இருக்கறப்பதான். புரியுதா உங்களுக்கு: நீங்க நடந்துக்குற யோக்கிதைக்கு இந்த வீடு நரகம் தான். அதுக்கு மேலே பேச நான் தயாராயில்லே! நான் வர்ரேன்! வழியை விடுங்க! செல்வமணி : காரணத்தை சொல்லாம கதை அளக்குறியே! உன்னலே என் உயிருக்குயிரான அக்காளே மறந்தேன், அக்கா மகளை இழந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க, துரோகின்னு பேசவும் இடம் கொடுத்தேன். இப்ப சொல்லு. நான் அயோக்கியன...துரோகியா! என் யோக்கிதையில என்ன குறைஞ்சு போச்சு! ைேசகினி . நீங்க உலகத்துக்கே துரோகியா l இருந்தாகூட எனக்கு கவலையில்லே! ஆன... அதை எப்படி சொல்வேன்? செல்வமணி : சொல்லு! அப்பத்தானே எனக்கும் தெரியும்: மோகினி காலையில எழுந்திருக்கும்போதே கைலே சீட்டு. கண்ணைமூடின குதிரை ரேஸ் ஞாபகம். சதா பெங்களூர் ஞாபகம். சாயங்காலம் ஆன சாராயம். இனிமேல என்ன வேணும்? வந்த ஒரு வாரத்துக்குள்ளே, ஊரை சுத்திகடன் வாங்கியாச்சு! வழியை விடுங்க... நான் போகணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/20&oldid=777080" இலிருந்து மீள்விக்கப்பட்டது