உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கால் பந்தாட்டம்


மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை இழைத்ததற்காகப் பெறும் மறைமுகத் தனியுதையால், பந்தை உதைத்து, நேரே இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற முடியாது. மற்றவர்கள் ஆடிய பிறகு பந்து இலக்கினுள் சென்றால்தான் வெற்றி எண்ணை அடைய முடியும்.

ஆ) நேர்முகத் தனி உதை (Direct Free - Kick)

வேண்டுமென்றே விதியை மீறும் தவறான செயல்களைக் குற்றங்கள் என்கிறோம். கீழே காணும் குற்றங்களை ஒறுநிலைப்பரப்பிற்குள் செய்தால், 'ஒறுநிலை உதையே' தண்டனையாகவும், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே எங்கு நிகழ்ந்தாலும், 'நேர்முகத்தனி உதையும்' எடுக்க எதிர்க் குழுவினர் வாய்ப்புப் பெறுவர்.

குற்றங்கள்

1) துன்பம் விளைவிக்கக் கூடிய வகையிலோ அல்லது முரட்டுத்தனமான முறையிலோ எதிர்க்குழுவினரை இடித்துத் தாக்குதல் (Charging).

2) எதிர்க் குழுவினருக்குத் துன்பம் நேரும் வகையில் முரட்டுத் தன்மையுடன் உதைத்தல், உதைக்க - முயலுதல்.

3) எதிர்க்குழு ஆட்டக்காரர்களை இழுத்தல். கட்டிப் பிடித்துக் கொள்ளுதல் (Holding).

4) அடித்தல், அடிக்க முயலுதல் (Striking).

5) எதிர் வரும் எதிர்க் குழுவினரை கைகளாலும் உடலாலும் மோதி வேகமாகத் தள்ளுதல் (Pushing).