உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


 2. விளையாட்டைப் பற்றிய முக்கிய விளக்கமும் விவரமும்

1. ஆட்டக்காரர்களும் - மாற்றாட்டக்காரர்களும்

ஆடுகளத்தின் உள்ளே விளையாடுவதற்குரிய போட்டிகளில் பங்கு பெறும் குழு ஒன்றுக்கு, ஆட்டக்காரர் 11 பேர் இருக்க வேண்டும். ஆட்டம் தொடங்குவதற்கு முன், 11 பேர்களுக்குக் குறைவான ஆட்டக்காரர்கள் ஒரு குழுவில் இருந்தாலும், ஆட்டத்தைத் தொடங்கலாம். ஆனால், ஒரு குழுவில் 7 பேர்களுக்குக் குறைவாக இருந்தால், ஆட்டத்தில் பங்கு பெறுவதற்குரிய தகுதியை, அக்குழு இழந்துவிடுகிறது.

நிரந்தர ஆட்டக்காரர்களும் (Regular Players) பதினொருவரைத் தவிர, அக்குழுவிற்கு மாற்றாட்டக்-