உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

என்று வளைந்த கரும்பு போல நின்று கொண்டு, ஆட முயற்சித்தால், பந்து எங்கேயாவது போகுமே ஒழிய, எதிர்பார்த்து அமையும் இடத்திற்குப் போகாது. நமக்கு மாற்றமே மிஞ்சும்.

ஆகவே, இப்படி பந்தை எடுத்து ஆடும்போது, இந்தக்கால் இவ்வாறு இங்கேதான் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமான அடிப்படை விதிமுறையாகும். அதனைக் காண்போம்.

பந்தாடும் மட்டைக்கு இருபுறங்கள் உண்டு (Side). அதனை முன்புறம் என்றும், பின்புறம் என்றும் கூறுவார்கள். கையில் பந்தாடும் மட்டையைப் பிடித்துக் கொண்டு நிற்கும்போது, எதிர்ப்பகுதியை நோக்கி இருக்கும் மட்டையின் பகுதி முன்புறம் ஆகும். தனது குழுபகுதியைப் பார்த்திருக்கும் பகுதி மட்டையின் பின்புறம் ஆகும்.

வருகின்ற பந்தை முன்புறத்தால் எடுத்தாடினால், முன்கைப்புற ஆட்டம் (Fore Hand Play) என்பார். பின்புறப் பகுதியினால் எடுத்தாடினால் அதனை பின்கைப்புற ஆட்டம் (Back Hand Play) என்பார்கள்.

நேராக வரும் பந்தை (Straight Ball) முன்கைப் புறத்தில் எடுத்தாடுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எல்லோரும் இயல்பாக, முடிந்தால் தவறில்லாமல் கூட நேராக ஆடிவிடலாம். பக்கவாட்டில் (Side) வருகின்ற பந்தை ஆடும்போது தான் சற்று கஷ்டமாக இருக்கும்.

மீண்டும் ஒரு விளக்கம் கூறினால், இம்முறை ஆட்டமானது இன்னும் தெளிவாக விளங்கும் என்று கருது-