1 1 0 வளையல்
கடாரத்திற்குச் சென்றோம். எங்கள் தலைவரும் உடன் இருந் தாா. கீழ் கடலிற் செல்வோர் செல்லுங்காலும் மீளுங்காலும் மணி பல்லவத் தீவில் இறங்கி அங்கமைந்த புத்தபா.த மேடையை - பீடிகையைத் தொழுது செல்வது யாவருக்கும் பழக்கம். இஃது உனக்கும் தெரிந்திருக்கலாம். கூடாரத்தில் வணி கத்தை முடித்துக் கொண்டு பண்டமாற்றாகப் பெற்ற ஆக்கப் பண்டங்களுடன் மிகுங்கால் மணிபல்லவத் தீவில் இறங்கினோம்.
அங்கு நாக நாட்டரசன் மகள் பீலிவளை எங்கட்கு முன்பே வந்திறங்கியிருந்தாள். அவளது ஏவற் சுற்றத்தாருடன் ஓர் அழ கிய பச்சிளங் குழந்தை இருந்தது. அரச குலத்துக் குறிகளுடன் விளங்கிய அக் குழந்தை பிறந்து பத்தே நாள்கள் ஆகியிருக்கும். அதன் கையில் ஆதொண்டக் கொடியாலாகிய அணி இருந்தது அது நாக நாட்டு வளப்பத்தின் அறிகுறி போலும். அக்குழந்தைப் பக்குவமான பேழையின் உள்ளே அமளி போன்றமைந்தத் தொட்டிலில் கிடத்தப் பெற்றிருந்தது. .* -
பேழையில் குழந்தை
எங்கள் தலைவரும் நாங்களும் புத்த பீடிகையை வணங்கி மீளுங்கால் அரசி பீலிவளை எமது தலைவரை வணங்கி உசாவி யாரென்று அறிந்தாள். புகார் நகருக்குச் செல்லும் தக்கவர் ஒருவரை எதிர்நோக்கி இருந்த அவள் மிக மகிழ்ந்தாள். எங் கள் தலைவரிட்ம் அவள் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அங் கிருந்த பேழையைக் காட்டி இக்குழந்தை சோழ மன்னர் நெடு முடிக் கிள்ளிக்கு உரிய குழந்தை. இதனை அவர்பால் சேர்த்த உதவ வேண்டும்'. ' என்று வேண்டினாள். தான் வர இயலாத வள் என்பதையும் குறிப்பாக உணர்த்தினாள்.
பீலிவளை நெடுமுடிக் கிள்ளி பற்றிய செய்தி இலைமறை காயாகப் பலராலும் அறியப்பட்ட செய்தியாகையால் அதனை
14. பீலிவளை தான் பயந்த புனிற்றினன் குழவியைத் தீவகம் பொருந்தி தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தாலும் மணிமேகலை; 2.4:44, 6.
3. 够 - 14. g • ?9 : 4, 6; 25 : 178 - 18.8