பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

65


3. துடைப்பான்கள் (Cleansers)

எண்ணையும், தண்ணீரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒருவகையான திரவத்திற்குப் பெயர் துடைப்பான்கள். இது சோப்பைவிட மிகவும் செளகர்யமான ஒப்பனைப் பொருளாகும்.

சுத்தமான விரல்களால், திரவத்தைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். சிறிது நேரம் கழித்துப் பஞ்சால் திரவம் தேய்த்த பகுதியை எல்லாம் அழுத்தித் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அழுக்கு நீங்கி, வறட்சியான தோல் நிலமையை மாற்றி முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது.

குறிப்பு: அழகு சாதனக்கடைகளில் “(Cleansers)” என்று கேட்டு வாங்கி உங்கள் முகத்திற்கு ஏற்ற துடைப்பான்களைப் பெற்றுக் கொள்ளவும்.

4. கிறீம் (Cream)

முகம் கழுவியபிறகு, முகத்தோல், வறட்சியாக இருந்தாலோ, அல்லது இறுக்கமாக இருந்தாலோ, அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தி சுகமான ஒரு இதம் தருகிற கிறீம்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடுமையான வெயிலிலோ அல்லது கடுங் குளிரில் செல்லும் பொழுதோ இயற்கையாய் முகத்திலே இருக்கும் எண்ணெய்ப்பசை போன்ற ஒரு அமைப்பை இந்தக் கிறீம்கள் ஏற்படுத்தி விடுகின்றன.

நம்மவர்களில் பலர் முகத்தின் அழகிற்காகத் தயிரைத் தேய்த்துக் கொள்வார்கள் கொஞ்ச