பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 13 வெற்றியோ தோல்வியோ, நன்மையோ தீமையோ, பாபமோ புண்ணியமோ, தர்மமோ துரோகமோ - எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை நீ சந்தித்தே வாழ்ந்தாக வேண்டும் என்கிற குறிப்பைத் தான், வாழ்' என்ற சொல் வருணித்துக்காட்டுகிறது. தருவித்து ஊட்டுகிறது. - “கை” காட்டும் வாகை: இப்படியெல்லாம் வாழ்வை சந்திக்கிறபோது, மனிதருக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஒழுக்கம் என்பதாம். r 'கை' என்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். ஒழுக்கத்திற்கு என்ன அவ்வளவு பெருமை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று வள்ளுவர் எவ்வளவு வலிமை மிக்க சொற்களைக் கொண்டு, வற்புறுத்திப் பாடி வைத்திருக்கிறார். ஒழுக்கம் என்பது உயிர் அல்ல. உயிருக்கும் மேலான ஒன்று, உயிர் போய் விட்டால் திரும் பாது. முடிந்து போனதுதான். அதுபோலவே, ஒழுக்கத்தையும் ஒருவர் உதறி விட்டால், அல்லது இழந்துவிட்டால், அவர் செத்தவர் போலத்தான். அவரை 'செத்தாருள் வைத்துவிட வேண்டும்.