25
36 பந்தெறியாளர் பந்தெறியும் போது ஏற்படுகின்ற தவறுகள் என்னென்ன?
விதிகளுக்கு உட்படாமல், முறைப்படி பந்தெறியாமல் போவதால், 'முறையிலா பந்தெறி' (No ball) என்றும், 'எட்டாப் பந்தெறி (Wide Ball) என்றும் தவறுகள் நேர்கின்றன.
37. முறையிலா பந்தெறி (No Ball) என்பதை விளக்குக?
விதிகளுக்குட்பட்டு பந்தெறிவது என்பது, வெறுமனே பந்தை வீசி எறிவது (Throw) என்பதல்ல. அதற்கேற்ற முறையோடு பந்தெறிவது தான் (Bowl). பந்தெறிபவர். கையிலிருந்து பந்தை எறிந்துவிடும் முயற்சியில் (Delivery) பந்தாடும் எல்லைக் கோட்டின் பின்பகுதியில் தரை மீதோ அல்லது உயர்ந்தோ அவரது முன் பாதத்தில் எந்தப் பகுதியும் தொடாதவாறு இருந்தால், அல்லது நடுவர் அது சரியில்லை என்று கருதினால், அல்லது பந்தெறிபவரின் பின்னங்காலும் (Back foot) அதற்குள்ளே வந்திருந்தால் அல்லது வந்தடையும் எல்லைக் கோட்டினைத் (Return crease) தொடாமல் அல்லது முன் பகுதிக்கு வராமல் இருந்தால், பந்தெறிபவர் பக்கம் உள்ள விக்கெட்டிற்குப் பின்புறம் நிற்கும் நடுவர், அதை 'முறையிலா பந்தெறி' என்று அறிவித்துவிடுவார்.
அத்துடன், பந்தெறியும்போது, பந்தெறியும் முறையில் இரு நடுவர்களில் யாராவது ஒருவர், அப்பந்து எறிமுறை சரியில்லை என்று உணர்ந்து, தன் முடிவில் திருப்தியடைந்தால், உடனே, அதை முறையிலா பந்தெறி என்று கூறிவிடுவார்.