பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

43


வேண்டும். அதற்குமாறாக பெண்ணை விரட்டிப்பிடித்து வேலை வாங்கியும், கோபப்படுவது போல் பேசியும் சாடியும் மணமகன் வீட்டார் நடந்து கொள்ள முயன்றாலும், கணவன் அவளை ஆதரவுடன் நடத்தவே வேண்டும்.

ஆதரவு காட்டுவதற்குப் பதிலாக, அல்லும் பகலும் அவளை உடலுறவுக்காகக் கட்டாயப்படுத்தி, முரட்டுத்தனமாக நடத்தும் ஆண் நடந்துகொள்ளும் போதும், பயந்தபெண்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட முயல்கிறார்கள். இதுதான் உண்மையாகும்.

அன்பு காட்டுவதும், நம்பிக்கை ஊட்டுவதும்தான் கணவனின் முதல் காரியமாக இருக்க வேண்டும். அப்படித்தானே!

ஆமாம்! திருமணம் நடந்து முடிந்த உடனேயே உடலுறவுக்காகத் துடிப்பது இயற்கை. அது இளமையின் தூண்டுகோல். உடல் சக்தியின் வேண்டுகோள். அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு போகும் பொழுதுதான், காலங்காலமாக இருவரும் நிம்மதியாக வாழ்வதற்கு வகை ஏற்படும்.

கரைபுரண்டு வரும் காட்டாற்றைத் தேக்கிவிட்டால், எப்படியெல்லாம் அந்த நீர் பயன்படுமோ, அதுபோலவே, பொங்கிவரும் உடலுறவு வெறியை கொஞ்சம் சாந்தப்படுத்தி, சரிசெய்து கொண்டுவிட்டால், பிறகு அதுவே பேரின்பம் தரும் கற்பக விருட்சமாகிவிடும்.

சரிசெய்துகொண்டு வாழ்வதுதான் தன்மையாகும். அப்படியானால், முதல் இரவுக்கு அவசரப்படக் கூடாது என்கிறீர்களா?

நான் கூறவந்தது அந்த அர்த்தத்தில் இல்லை. முதல் இரவுக்குத் தம்பதிகள் ஆர்வம் காட்டவில்லை