38
சடுகுடு ஆட்டம்
9. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழு ஒருவர் மாற்றி ஒருவர் என்று பாடிச் செல்ல, ஒருவரை உடனடியாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஆட்டம் முடியும் வரை.
10. எதிராட்டக்காரரை வேண்டுமென்றே யாராவது பிடித்துத் தள்ளினால், பிடித்துத் தள்ளிய ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். வெளியே சென்ற ஆட்டக்காரர் ஆட்டமிழக்க மாட்டார்.
11. எதிர்க்குழுவினரான ஏழு பேர்களையும் ஒரு குழு ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றிவிட்டால், கடைசியாக வெளியேற்றிய ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றி எண்களைத் தந்து, அதற்கும் மேலாக லோனா என்று சிறப்புத் தகுதி தந்து, அதற்காக 2 வெற்றி எண்களைப் பரிசாகவும் அளிக்கிறது.
12. ஒரு ஆட்டக்காரரை வெளியேற்றினால், ஒரு வெற்றி எண் கிடைக்கும்.
13. ஆட்டத்தின் மொத்த நேரம் 40 நிமிடங்கள். ஒரு ஆட்ட நேரப்பகுதிக்கு 20 நிமிடங்கள் என்று இரண்டு ஆட்ட நேரப்பகுதிகள் உண்டு. இரண்டு பகுதிக்கும் இடைவேளை நேரம் என்று ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
14. ஆட்டத்திலிருந்து, வெளியேற்றப்பட்டு ஆட்டம் இழந்தவர்கள், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட, உட்காரும் கட்டத்தில் (Sitting Block) போய் வரிசை முறையில் உட்கார்ந்துகொள்ள வேண்டும்.
15. அவர்கள் மீண்டும் உள்ளே சென்று ஆட வாய்ப்பு வரும் வரை அங்கிருந்து, எதிர்க் குழுவினர்