இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78
பிடித்தாடும் ஆட்டம்
முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை விளையாட்டுக்களில் எல்லாம், தாக்கி ஆடும் முறை என்றும், அதனைத் தடுத்தாடும் முறை என்றும் இருக்கும். சடுகுடு ஆட்டத்தில் தடுத்தாடும் முறை என்று அழைக்கப் படாமல், பிடித்தாடும் முறை என்றே பெயர் தரப்பட்டிருக்கிறது.
பாடிவரும் எதிராட்டக்காரர் தங்களை தாக்கித் தொட மேற்கொள்கின்ற அரிய முயற்சிகளை எல்லாம் தடுத்துவிடுவதுடன் மட்டுமன்றி, அவர்களைப் பிடித்து