பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

காலம் மாறிக் கொண்டே வந்தது. மக்கள் கற்பனையும் மலர்ந்து, விரிந்து கொண்டே வளர்ந்தது. விரல்களால் உருண்டைப் பொருட்களைத் தள்ளி விளையாடிய போதும், பந்து நின்றபோதும் அதனை மீண்டும் தள்ளிவிட, சிறு சிறு குச்சிகளைப் பயன்படுத்தினர். அந்தச் சின்னஞ் சிறு சுள்ளிகள். பெரிய கம்புகளாகப் பிற்காலத்தில் மாறி வந்தன, வளர்ந்தன.

கற்களையும், பழங்களையும் அகற்றிவிட்டு, அதே அளவுள்ள பொருளாக, மரத்தில் கட்டைகளால் உருவாக்கினர். அதனை அடித்து உருட்ட, பெரிய வளைந்த கம்புகளைப் பயன்படுத்தினர். செவ்விந்தியர்கள் கூட்டம் இப்படித்தான் ஆடியது. மேலே நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் இப்படித்தான் ஆடினர் என்று வரலாறு கூறுகிறது.

பின்னும் ஆட்டம் வளர்ந்தது. இங்கிலாந்து மக்கள் பல இாறு ஆண்டுகளுக்கு முன்னே, எதிரிகளை இழிவு படுத்து வதற்காக, அவரது மண்டை ஒடுகளைத் தோண்டி எடுத்து, உதைத்தாடி மகிழ்ந்தனர். அந்த ஆட்டம் கால் வலியை ஏற்படுத்தவே. அந்த மண்டை ஒட்டின் அளவிலே பந்து வேண்டும் என்ற தேவையால், பந்தின் வடிவம் அதே அளவாகப் பரிணமித்தது.

தோல்பை தோன்றியது. அதனுள் வைக்கோலைத் திணித்து ஆடினர், பஞ்சை அடைத்தும் மயிர்க் கற்றைகளே. செலுத்தியும் பந்தாக உருமாற்றி இன்பங்கண்டனர். தோல் பையினுள்ளே மெல்லிய தோலுறை (Bladder) ஒன்றைப் புகுத்தி, அதனுள் காற்று செலுத்தித் துள்ளும் பந்தாக மாற்றினர். கீழே கிடக்கும்போது காலால் உதைத்தும், மேலே கிளம்பும்போது கையால் அடித்தும் மகிழ்ந்தனர்.

தனியாக ஆடிக் கண்ட இன்பம் தணியத் தொடங்கிய சூழ்நிலையில், துணையாகப் பலர் இருந்தால் துடிப்பாக ஆட-