பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

88


35. உயரமாய் வளர்வது குற்றமா!

சோவியத் நாட்டின் பெண்கள் கூடைப் பந்தாட்டக் குழுவில், ஒரு விளையாட்டு வீராங்கனை, பெயர் இலியானா சிமினோவா. ரீகா எனும் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளான இலியானாவின் உயரம் ஏறத்தாழ ஏழடி ஆகும்.

28 வயது ஆன அந்த இளமங்கையின் எடையானது 284 பவுண்டாகும். இன்னும் திருமணமாகவில்லை. என்றாலும், விளையாட்டில் விருப்பமும் விடாத முயற்சியையும் உடைய இலியானாவுக்கு பிரச்சினைகள் அடிக்கடி வரத்தான் செய்கின்றன.

கூடைப் பந்தாட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரியாக விளங்கும் இலியானா, தனது திறமையை வளர்த்துக்கொள்ள, ஆண்களுடன் தான் விளையாடி பயிற்சி செய்வாள். அதிக உயரமும், தேவையான எடையும் இருந்தாலும், ஆண்களைப்போல வேகமாக ஓட முடியவில்லை, உயரமாகத் தாண்டமுடியவில்லை என்ற குறை இலியானாவுக்கு இருக்கத்தான் இருக்கிறது.

'தானும் ஒரு பெண்தான். ஆணைப்போல ஓடி ஆடிட முடியவில்லை என்று எண்ணி மயங்கும் நேரத்தில். இன்னொரு பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கின்றார்கள். அகில உலகக் கூடைப் பந்தாட்டக் கழகத்தினர்.

கூடைப் பந்தாட்டத்தில் பங்குபெற வரும் ஆட்டக்காரிகளின் உயரத்தினை அடிப்படையாக வைத்து, இரண்டு பிரிவாகப் பிரித்து, அந்தந்த பிரிவுக்குத் தனித் தனியாகப் போட்டி நடத்தப் போகிறோம் என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண உயரமுள்ள பெண்களை