பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ். செல்லையா


ஏதாவது ஒரு மருந்தினால் எடை கூடுவது போலத் தோன்றினாலும், அந்த மாத்திரையை நிறுத்தி விடுகிறபோது, தானாகவே, எடை குறைந்து விடுகிறது என்பதால், மருந்து மாத்திரைகளால் தான், உடல் எடை கூடி குண்டாகி விடுகிறது என்பதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

கர்ப்பமடைந்த பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், கர்ப்பத்தால் தான் குண்டாகி விடுகிறோம் என்று கூறுகின்றார்களே அவர்கள் சொல்வது சரிதானா?

5. கர்ப்ப காலத்தில் உடல் எடை குண்டாவது ஏன்?

குழந்தை பெற்ற பெண்களில் பலர் தங்களின் தேக எடை கூடுவதற்கு தாங்கள் கர்ப்பமானதும், குழந்தை பெற்றதும் தான் முக்கிய காரணம் என்று அடித்துச் சொல்வார்கள். ஆரவாரத்துடன் பேசுவார்கள். அதில் ஒரளவு உண்மை இருக்கத்தான் இருக்கிறது.

கர்ப்பம் அடைவதற்கும் உடலில் ஏற்படுகின்ற சில மாற்றங்களுக்கும் உண்மையாகவே ஒற்றுமை இருக்கிறது. கர்ப்பத்தில் வளர்கின்ற குழந்தைக்காக அதன் மீது ஏற்படுகிற தனிக் கவனமும், ஆசையுடன் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடக்க முடியாத ஆர்வமும் மேலெழுந்து அந்தத் தாயின் வாழ்க்கை முறையையே மாற்றி விடுகிறது என்பதும் உண்மைதான்.

சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் அந்தப் பெண்ணின் எடை 22 பவுண்டு முதல் 28 பவுண்டு