பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


மிதிக்க முடியாமலும் சிரமப்பட்டதால், முளைக் கம்புகள் நீக்கப்பட்டு, தளங்கள் ஆக்கப்பட்டன என்றும் சதுரமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது என்றும் கூறுவர்.

நியூயார்க் நகரிலுள்ள, கூப்பர் டவுனைச் சேர்ந்த எப்னர் என்பவர்தான்,1839 ஆண்டு ததைக் கண்டு பிடித்தார் என்றும் பலர் நம்புகின்றனர். ஆனால் 1839 ஆண்டுக்கு முன்பிருந்தே, Base ball என்ற பெயரில், இந்த ஆடப்பட்டிருக்கிறது என்று ராபின்கார்வர் என்பார் தமது நூலில் எழுதி மறுத்திருக்கிறார்.

அலெக்சாண்டர் கார்ட் ரைட் என்பாரை 'நவீன தளப்பந்தாட்டத்தின் தந்தை' என்று அழைக்கின்றனர். அவர், ஒரு குழுவிற்கு 9 பேர்களே இருக்க வேண்டும் என்றும், முனைக்கு முனை முளைக் கம்பு அடிக்கப்பட்ட இடத்திலிருந்து மாற்றி,தரையிலேயே தளமாக அமைத்ததும், 90 அடி நீளம் அகலம் உள்ள சதுரமான வடிவத்துடன் ஆடுகளத்தை சமைத்ததுமே இவர் இவ்வாறு புகழப்படுவதற்குக் காரணமாக அமைந்தன.

பந்தை அடித்து விட்டு, முதல் தளம் இரண்டாம் தளம் மூன்றாம் தளம் இவற்றில் கால் ஊன்றி தொட்டபிறகு, தான் அடித்து விட்டு ஓடிய அடித்தாடும் தளத்திற்கே திரும்பி வந்து விட்டால், 'ஒரு ஓட்டம்' (One Run) கிடைக்கும்.