பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




23. வலிமைக்கோர் பொலிடாமஸ்

தெசாலி என்னும் பகுதியில், ஸ்காட்டுசா என்னும் நகரில் வாழ்ந்து வந்தான் பொலிடாமஸ். இவன் பங்கராசியம் எனும் குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த பயங்கரப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றான். கி.மு. 408 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்டு, ஒரே முறைதான் வெற்றி பெற்றான் என்றாலும், இவன் புகழ் மாவீரன் மிலோவையும் மிஞ்சக் கூடியதாக அமைந்திருந்தது.

இவன் மிகுந்த வலிமையுடையவன் என்பதனால் மட்டும் மற்றவர்கள் பொலிடோமலைப் புகழவில்லை. எல்லா ஒலிம்பிக் வீரர்களையும் விட உயரமானவனாகவும் இருந்தான் என்பதனால்தான் என்று கூறுகிறார் பசானியாஸ் எனும் ஆராய்ச்சி வல்லுநர்.

வலிமையில் மிகுந்தவன் பொலிடாமஸ் என்பதை வற்புறுத்துகின்ற வகையிலே பல கதைகள் உலவி வருகின்றன.

ஒலிம்பியஸ் என்ற மலைக்குப் போனானாம் பொலிடாமஸ். தன்னந் தனியனாகப் போனவன் எதிரே சிங்கம் ஒன்று எதிர்பட்டுத் தாக்கியபோது, அவன் தன் வெறுங் கையாலேயே அடித்துக் கொன்றான் என்பதாக ஒரு கதை. இது அவனுடைய அஞ்சாமையையும் போரிடும் ஆற்றலையும் விளக்குவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஒருமுறை பொலிடாமஸ், ஒரு காளைமாட்டின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டானாம்;