பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

102


40. இடம் பிடிப்பது சுலபமா என்ன?

1922ம் ஆண்டில் ஒருநாள் மாலைநேரம். வளைகோல் பந்தாட்ட ஆடுகளத்திற்குள் இரண்டு குழுக்கள் விளையாடத் தயாராக இருக்கின்றன. ஏனோ தெரியவில்லை. ஆட்டம் தொடங்கிடவில்லை.

சிறிதுநேரம் கழித்துத்தான் சேதி தெரிகிறது. ஒரு குழுவில் 10 ஆட்டக்காரர்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் ஒருவர் இருந்தால் ஆட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆனால் ஆள் யாரும் கிடைக்க வில்லையே!

ஏக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து மற்றவர்கள் நிற்கும்பொழுது, ஒருவனைப் பார்க்கிறார்கள். பள்ளிக்கூடம் விட்டு அந்தப் பையன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். அவனை வந்து விளையாடு என்று ஆள் தேடும் குழுவினர் அழைக்கின்றார்கள். அவனும் சரி என்று, புத்தகப் பையை கீழே போடுேவிட்டு வந்து சேர்ந்து கொள்கிறான்.

பதினோராவது ஆட்டக்காரர் இல்லை என்பதற்காக, ஆள் இல்லாததால்,' ஒப்புக்குச் சாப்பாணி' என்பார்களே, அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டான் அந்த சிறுவன்.

ஆட்டம் தொடங்கி விட்டது. அவன் மைய முன்னாட்டக்காரர் (Centre Forward) என்ற இடத்தில் நின்று ஆடத்தொடங்கினான். புதிதாக வந்து சேர்ந்த பயமோ அல்லது மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியாத தன்மையோ என்னவோ, அந்தச் சிறுவன் பயந்து பயந்து ஆடினான். அதாவது தன்னம்பிக்கை யில்லாதவனாகவே ஆடிக்கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த ஒருவர் சிறுவன் அருகில் வந்து, தம்பி! நீ விளையாடுகின்ற இடம்