42 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? தொடர்ந்து ஒருவராக ஒடி ஒரு ஒட்டப் போட்டி நிகழ்ச்சியை முடிப்பதாகும். அதற்குச் சான்றாக அவர்கள் கையிலே ஒரு குறுந்தடியை (Baton) வைத்துக் கொண்டு ஒடவேண்டும் என்பது விதிக்குட்பட்ட முறையாகும்.
அந்தக் குறுந்தடி குறைந்தது நான்காவது, ஒரு போட்டிக்குத் தேவைப்படும். அதிகமாக 6 இருந்தால் போதுமானது.
ஒவ்வொரு குறுந்தடியும் உள்ளே துவாரம் இருப்பது போன்ற அமைப்புடனும், 11 அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரை நீளம் உள்ளதாகவும், 4.75 அங்குல சுற்றளவுடன் 13/4 அவுன்சு எடையுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
3. இடவசதிக் குழு (Seating Arrangements) போட்டி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக விழா நாளன்று நடத்துதற்கேற்ப, பந்தயத் திடலை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, பந்தயம் பார்க்க வருகின்ற பொது மக்களையும், விளையாட்டு ரசிகர்களயும் எவ்வாறு வரவேற்று அமர வைக்கலாம் என்று பணிபுரியும் குழுவிற்கே, இட வசதிக்குழு’ என்று பெயராம்.
பந்தயத்தை ஆவலோடு பார்க்க வருகின்ற பெற்றோர்களை, பொதுமக்களை எங்கே அமர வைக்க வேண்டும் என்பதுதான் முதல் பிரச்சினை.