பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ olசலலையா so- 131 2. முதல் தளத்தை சரியாக மிதிக்காமல் ஒடி, இரண்டாம் தளத்திற்குச் சென்று அங்கே இருந்து தொடர்ந்து ஆட முயலும்போதும் ஆட்டமிழக்கிறார். 5. உரிமையுடன் தளம் நோக்கி முன்னேறுதல் தள ஓட்டக்காரர்கள் தொடப்பட்டாலும் ஆட்டம் இழக்கமாட்டார்கள் என்ற உரிமையுடன் தளம் நோக்கி முன்னேறிச் செல்ல, கீழ்க்காணும் விதிமுறைகள் வழிகாட்டுகின்றன. 1. பந்துகள் (Balls) என்ற அடிப்படையில் 4 பந்து ஆனதால், நடுவர் அறிவித்த பிறகு, முதல் தளம் நோக்கிப் பந்தடி ஆட்டக்காரர் வருகின்ற நேரத்தில், அந்தத் தளத்தை விட்டுவிட்டு, மற்ற தள ஒட்டக்காரர் மாறிச் சென்றுதான் ஆக வேண்டும். குறிப்பு: அப்பொழுது, பந்து தடுக்கப்படாவிடில், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தள ஒட்டக்காரர் ஒரு தளம் செல்லலாம். பந்து ஆட்டத்தில் இருக்கும் பொழுது தொடப்பட்டால், ஆட்டமிழக்கலாம் என்ற விதி இருப்பதால், அதற்குட்பட்டால் மேலும் தளம் நோக்கி முன்னேறியும் விடலாம். 2. பந்தைத் தடுத்தாட முயலும் பொழுது அல்லது பந்தைக் கையில் வைத்துக்கொண்டு தள ஒட்டக்காரரைத் தொட ஒரு தடுத்தாடுபவர் (Fielder) முயலலாம். அவ்வாறு இல்லாத நேரத்தில், தளம் நோக்கி ஓடுகின்ற ஒட்டக்காரரை, தளத்தைத் தொடவிடாமல் தடுத்தாடுபவர் 35(Säästgö (Obstruct). தண்டனை: அவ்வாறு தடுத்திருக்காவிட்டால், தள ஒட்டக்காரர்கள் ஒரு தளம் ஒடியிருப்பார்கள் என்று