உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 27

அப்பொழுதே அவர் அமரராகிவிடுகிறார்.

தமிழ் நாட்டில் தவறுதலாகிப் போன சொற்களில், இந்த அமரர் என்ற சொல்லும் ஒன்று.

அமரர் என்றால் வானவர் என்பது பொதுவான அர்த்தம்.

அமர்+அர் என்று பிரிக்கப்படும் இந்தச் சொற்களுக்கு, மனதிலே அமர்ந்திருப்பவர் என்பது அர்த்தம்.

செயற் கரிய செய்பவர் பெரியர் என்றாரே வள்ளுவர். அதுபோல, பல புகழ் மிக்க காரியங்களைச் செய்து, புனிதராக விளங்கி, மக்கள் மனதிலே, நீக்கமற நிறைந்து, நெஞ்சத்தில் நிலையாக அமர்ந்து விடுவோரைத் தான் அமரர் என்றனர்.

அதாவது, மக்கள் குலத்தில் ஒருவராக, இந்த மன்பதையில் வாழ் ந்து வருகிற வரை, மக்களின் மனதிலே, மாறாத, மறையாத ஒரு இடத்தைப் பிடித்து, புகழுடன் வாழ்பவர் என்பதுதான் அர்த்தம்.

அதாவது, அத்தகைய அருமையானவர், இறந்து போனாலும் அழிந்து போகாமல் வாழ்ந்து வருகிறார் என்பதே அர்த்தம்.

இதையேதான் வடமொழியும் , வளமாகப் பேசுகிறது.

மர்கயா என்றால் மரணமடைந்து போனதைக் குறிக்கும் .

மர் என்றால் மரணம்.