உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I22 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வேடம் கொண்டு அலைந்தார்கள். அவர்களின் அநியாய வாழ்க்கை முறையைக் கண்டு, வள்ளுவர் மனம் நொந்திருந்தார் என்று அவர் பாடிய குறட் பாக்களே, சான்றாக விளங்குகின்றன.

துறவிக் கோலம் பூண்டு, தீய வழிகளில் , வஞ்சகமாய் வாழ் வோர் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

‘மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி

மறைந்ததொழுகும் மாந்தர் பலர் (278)

அவ்வாறு, உண்மையாக துறவறம் கொள்ளாமல், துரயவழி வாழாமல், வாழ்கின்ற பொய்த் துறவிகளை விடக் கொடியவர்கள், இந்த உலகில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

‘நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல் (276)

உலகின் பற்றுக்களை யெல்லாம், ஒழித்து விட்டோம்; அழித்து விட்டோம் என்று பொய்களைக் கூறி, பலரையும் நம்ப வைத்து; பிறர் வெறுக்கும் தீய ஒழுக்கங்களை மேற் கொண்டு வாழ்ந்து வரும் போலித் துறவியர்க் கு, பல துன் பங்கள் நேரும். கட்டாயம் வந்து சேரும் என்று கடுமையாகவே பாடுகிற குறளைப் படியுங்கள்.

“பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவும் வரும் ‘ ( 275)

தவத்தார் போல ஜடாமுடி வேண்டாம் .

தூக்கணாங் குருவியின் கூடுபோல தாடியும் தொங்க வேண்டாம் . முடியை மழிக்கவும் வேண்டாம் .