உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உணர்ந்த வள்ளுவர், மனிதத் தன்மையை புனிதத் தன்மையாக்கும் கொள்கை வேகத்துடன் பாடினர்.

சமுதாய மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் வழிவகை செய்து, வெற்றிகரமாக நடத்திச் செல் லக் கூடிய அறிவு, குறளுக்குள் இருக்கிறது.

மனிதர்களில் மிகக் கீழோராக வாழ்பவருக்கும் உயர்வு உண்டு. நடுத்தர வாழ்க்கை வாழ் பவருக்கு, மேலும் மேலும் உயர்வு உண்டு. அதிலிருந்து வாழ்வில் உயர்ந்து கொள்பவருக்கும் மேன்மேலும் உயர்வு உண்டு. என்பதில் வள்ளுவர் தான் நம்பிக்கை கொண்டிருந்ததுடன், கற்கின்ற எல்லோருக்கும் அந்த எழுச்சி மிக்க நம் பிக்கை வளர வேண்டும் , மலர வேண்டும் என்றே பாடினார்.

தாழ்ந்தவர்களை சோர்ந்து போகாதீர்கள் என்று தன்னம் பிக் கை ஊட்டுகிற அதே நேரத்தில் , உயர்ந்தோர்களாக இருப்பவர்களை, போதும் என்று நிறுத் தி விடாதீர்கள். மனித சக்திக்கு எல்லையே இல் லை என்ற கொள்கை முழக்கமே குறள் முழுவதும் கொட்டிக் கிடப்பதை, எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த அடிப் படைக் கருத்துக்களை வைத்துக் கொண்டு, இந்த உலகத் தில் உலா வருகின்ற சக்திகளையெல் லாம் நான் நான்கு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தேன். தொகுத்துப் பார்த்தேன்.

அந்த நால்வகைச் சக்திகளை சற்று விரிவாகக்

காண்போம்.

1. மனித சக்தி