உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I64 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

3. உடம்பிலே உள்ள உறுப்புக்களில் பெரியது.

இங்கே ஏன் தலையைப் பற்றி, இவ்வளவு விளக்கமாக எழுதுகிறேன் என்றால், தலைக்குள்ளே உள்ள மூளையைப் பற்றியும் கூறினால்தான், இந்தக் குறளுக்குரிய விளக்கமும் முழுமைபெறும்.

மூளை என்பது, உடலின் செயல் பாடுகளை

கட்டுப் படுத் தி, கட்டுக் கோப் போடு நடத்துகிற பிரதான பெரும்பணியைப் புரிந்து கொண்டிருக்கிறது.

உடம் பின் உள்ளேயும், புறத்தேயும் நடக்கின்ற நிகழ்வுகளையெல்லாம், ஏற்றுக் கொண்டு, சேர்த்து வைத்துக் கொண்டு, அவற்றை ஒழுங்கு படுத் தி, ஆணைகளைப் பிறப்பித்து, சுமுகமாக செயலாற்றிக் கொண்டு இருக்கிறது.

அத்துடன், அறிவு, நினைவு, உணர்ச்சிகள், ஆளுமை, மற்றும் விழிப் புணர்ச்சித் தன்மைகளை வளர்த்தும் விளைத்தும், பேராற் றல் மிகுந்ததாக விளங்குகிறது.

மூளையானது முக்கிய மண்டலமாகவும் , ஐம்புலன்களை செயல்படுத்தும் நிலைக்களனாகவும் இருப்பதால் தான், எண் சாண் உடம் புக் கே சிரசே பிரதானம் என்றார்கள்.

இவ்வளவு பெருமை வாய்ந்த தலையானது, ஒருவரை வணங்குகிறது என்றால், ஐம் பொறிகளும் அடங்கி, மூளையும் இணங்கி ஒருங் கிணைந்து செயல்படுகின்றது என்றுதானே அர்த்தம்.

அதாவது அகமும் புறமும், அந்த செயலை அங்கீகரித்திருக்கிறது, அனுமதித்திருக்கிறது என்பதை, இங்கே தெளிவாகப் புரிந்து கொள்வோம்.