உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தெரிந்தும், மறைந்தும் வருகிறது.

எழுதப்படுவதால் எழுத்து என்றனர்.

எழுத்துக்கள் பல இணைந்து சொல்லாகின்றன.

சொற்கள் எல்லாம் பலவிதமான பொருளைத்

தெரிவிக்கின்றன.

இப் படி எழுந்த எழுத்தும், சொல்லும், பொருளும் சேர்ந்து இலக்கியமாகின்றன. இலக்கணமாகின்றன.

மக்களின் வாழ்க்கையை மகிமைப் படுத்தும் முகத் தான் பிறந்த இலக்கணமும் இலக்கியமும் , மேலும் மலர்ந்து வளர்ந்து, மக்களை இன்பப்படுத்துவது மட்டும் போதாது என்று, நல்ல ஒழுக்கமான வாழ்க்கையைக் கற்றுத்தெளிவாக்குகின்ற மறையாக மாறியது. வேதமாக விளைந்தது. சுருதியாக ஒலித்தது.

எழுத்துக்கள் எல்லாம் இப்படி மனித குலத்தின் மதிப்பு மிக்க வாழ்க் கையை, சிறப்பு மிக்க வாழ்க்கையாக மாற்றி அமைத்திட முனைந்தன.

எழுத்துக்கள் என்றதும் , நமக்கு நினைவுக்கு வருவன உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்

எழுத்து ஆகும்.

இந்த மூன்று வகையெழுத்தையும் , பிங் கல

நிகண்டு எழுதிய பிங் கல முனிவர் எப்படி

எடுத்துரைக்கிறார் பாருங்கள்.

1. எழுத்தெனப் படுபவை ஆண் பெண் அலியே (பிங்கலம் 1357)