பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


உடற்கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்.1892ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயங்களை மீண்டும் துவக்க வேண்டும் என்ற தன் தணியாத ஆசையை வெளியிட்டார். 1894ம் ஆண்டு உலக முழுவதற்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது சலியாத உழைப்பின் காரணமாக, 1896ம் ஆண்டு ‘ஏதென்ஸ் நகரத்திலே முதல் ஒலிம்பிக் பந்தயங்கள் இடம் பெற்றன.


புதிய ஒலிம்பிக் பந்தயங்களைத் துவக்கியதன் நோக்கம் என்ன?


ஆற்றல் மிக்க இளைஞர்களும்,பெண்களும் ஆயிரக் கணக்கிலே போட்டிகளில் பங்கு பற்றுகின்றார்கள். ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள, ஒருவர் ஆற்றலை ஒருவர் தெரிந்துகொள்ள, ஒருவருக்கொருவர் உள்ளத்து உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள, கருத்துக்களைப் பரிமாறி கொள்ள வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்க மாகும்.


மாறுபட்ட மொழி, வேறுபட்ட கலாசாரம், கூறு படுத்தும் போட்டி பொறாமை எல்லாம், வியைாட்டிலே ஒன்றிய உள்ளங்களைப் பிரிக்க முடியாது என்பதை உலகிற்குக் காட்ட உதவுவது ஒலிம்பிக் பந்தயங்கள். அன்னிய நாட்டிலே அன்னியரோடு கலந்துறவாடவும், ஒருவரின் திறமையை மற்றவர் வரவேற்றுப் புகழவும் வசதி அளிக்கிறது.


உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் போரின் பயம் நீங்கி அமைதியுடன் வாழச் செய்யவே, அனைத்துலக மக்களையும் விளையாட்டரங்கத்தில் ஒன்று படுத்த விழைந்தார் திரு கூபர்ட்டின் புதிய ஒலிம்பிக்கின் தந்தை