வள்ளுவர் வணங்கிய கடவுள் 155
பொருள். ஆனால் குணம் என்பதற்கு தன்மை,
ஒழுக்கத் தன்மை, தகுதி, திறன், இயல்பு, என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
எண் குணத்தான் என்றால் கடவுள் என்றும் , அருகன் என்றும் பொருள்கள் உண்டு.
அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம்.
இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நாம் பொருள் காண்கிற போது, வலிமை இல்லாத ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, செவி, மெய் எல்லாவற்றிற்கும் வலிமையான (குணம்) நலம் இல்லையே என்பதாகத் தான் ஏற்க முடிகிறது.
ஐம்பொறிகளும் வலிமையோடு இருந்தால்தான், ஒருவர் முழு மனிதராக உலகில் வாழ முடியும். உலா வரமுடியும்.
ஏன் அப்படி என்றால் , அதுதான் மானிட பிறவியின் மகிமையாகும். மரியாதை மிக்க மதிப்பான சிறப்புமாகும்.
இயற் கைப் பொருட்கள், மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது, அப்படிப்பட்ட உண்மை தான் நமக்குக் கிடைக்கிறது.
ஒரு ரோஜாப் பூவை எடுத்து, அதன் இதழ்களை ஒவ்வொன்றாய் பிய்த்துப் பாருங்கள். எத்தனை இதழ்களை அந்தப் பூ இழந்தாலும், அதற்கு ரோஜா என்றுதான் பெயர்.
ஒரு மரத்தின் கிளைகளை எத்தனை தான்