உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 69

போல எதையும் பற்றிக் கொண்டு, அறிவு பெற்றுக் கொள்கிற முதல் தர மாணவன்.

2. குரு அருகில் இருக்கும் போது, அவர் தொட்டதும், அவரது உணர்வுகளைப் பற்றிப் பெற்றுக் கொள்கிற வன். இவன் கற பூரம் போன்ற இரண்டாந்தர மாணவன்.

3. பற்ற வைத்தாலும், மரக்கட்டைகள், உடனே பற்றிக் கொள்வதில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னர் ஊதி ஊதித் தான், தீயைப் பற்ற வைக்க வேண்டும். கட்டைகள் தீப்பற்றுவதுபோல, கவு டப் பட்டு, அறிவு பெறுகிற மூன்றாந்தர மாணவன்.

4. என்னதான் சொன்னாலும், எவ்வளவு தான் முயற் சித்தாலும், மனதில் ஏறாத, ஏற்றிக் கொள்ள முடியாத மூடம், அதாவது ஜடம் போன்ற மாணவன். வாழைத்தண்டில் எப்படித்தான் முயன்றாலும் தீயை ஏற்றவே முடியாத பச்சை வாழைத்தண்டைப் போன்ற நான்காம் தர மாணவன்.

இப்படி பல பிரிவுகளில் இருந்தாலும், மாணவர் களது நிலை, தங்கள் குருவின் பின் சென்று பயிலுதல், வாழ்க்கையைத் தொடருதல் என்பது தான் மிகவும்

முக்கியம்.

பேரறிவாளனாக விளங் கும் வாலறிவனின் நற்றாள் என்கிறார் வள்ளுவர்.

நற்றாள் என்பதை நல்+தாள் என்று பிரிப்பார்கள். நல்ல தாள் என்பது நல்ல திருவடிகள் என்று பொருள் தரும். நல்ல தாள் என்பது நல்ல முயற்சி என்றும் பொருள் தரும்.