டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
94
ஒட்டப் பந்தயம் தான், பிறப்புக் குப் பெருமையை அளிக்கிறது. வென்ற உயிரானது ஜீவனாகிறது. அதனால், பிறப்பால் எல்லோரும் ஒன்றுபடுகிறோம். பேதம் எதுவுமில்லை என்று அன்றே பாடினார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
இவ்வாறு விருப்பும் வெறுப்பு மின்றி, எல்லோரையும் ஒன்றாகப் பார்க் கும் பண் புள்ள குருவின், திருவடிகளை சேர்ந்தார்க்கு, அதாவது அவரின் அடிச் சுவட்டைப் பின்பற்றி வாழ்க்கையில் அறம் சான்ற வழிகளில் நடப் போர்க்கு, யாண்டும் இடும்பையில என்கிறார் வள்ளுவர்.
யாண்டும் என்றால் , எங்கும் , எப்போதும் என்பது அர்த்தம். இடும் பை என்றால், துன்பம் என்று தான் பொருள் எழுதிச் சென்றிருக்கின்றனர். துன்பம் என்றால், மனதுக்கும் வருத்தம், உடலுக்கும் வருத்தம் என்றும் கூறலாம். -
அப்படிப்பட்ட துன்பமும் துயரமும், வருத்தமும் வேதனையும், தன்னாலும் வரும், பிறராலும் வரும், இயற் கையாலும் வரும் , செயற்கையாலும் வரும் என்பார்கள்.
இதை அகச் சூழ்நிலை, புறச் சூழ்நிலை என்றும் பிரிக்கலாம். அச்சம், பயம், அகந்தை, அவமானம், வெறுப்பு மனநோய் இவற்றை அகத் துன்பம் எனலாம்.
எந்த உயிரின் மீதும், எந்தப் பொருளின் மீதும் வேண்டும் என்ற விருப்பமோ அல்லது வேண்டாம்