வள்ளுவர் வணங்கிய கடவுள் 193
சூரிய ஒளி மூலம் தண் ணிரையும் கரியமில வாயுவையும் சேர்த்துக் கொண்டு, பச்சை இலை தழைகள், மாவுச்சத்தை (Starch) ஒளிச்சேர்க்கை மூலம் (Photo Synthesis) (6) Fui@ grpgor.
அதன் காரணமாக, தாவரங்கள் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு, பிராணவாயுவை
வெளியே விடுகின்றன. o
அந்தப் பிராணவாயு வைத் தான், மக்கள் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கின்றனர். நமக்கு உயிர் பிச்சையை, தாவரங்கள் மூலமாக, சூரியன்
வழங்கி விடுகின்றது.
தாவரங்களையும் வளர்த்து, மனிதர்களையும் உயிர்வாழச் செய் கின்ற சேவைதான், இன்றும் மேன்மை மிக்கதாக விளங்குகிறது.
மனிதர்களது தோல் புறத்தில் சூரிய ஒளி விழுகிற போது, அந்த சூரிய ஒளியும் தோல் பகுதியும் சேர்ந்து கொண்டு, வைட் டமின் D எனும் உயிர்ச் சத்தை உண்டாக்கி விடுகின்றன.
வைட் டமின் D யானது, கால் சியத் சத்தாகும். கால்சியச் சத்தானது, உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமையாக்குகின்ற வரப் பிரசாதத்தை வழங்கி விடுகிறது.
எலும் புகள் வலிமை பெறுவதால், தேகம் நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல. எலும்பு மூட்டுக்களில் உள்ள எலும் பு மஜ்ஜை என்கிற எலும்புச் சோற்றில் பிறக்கும் சிவப்பு இரத்த அணுக்களும் , வெள்ளை ரெத்த அணுக்களும், வளமானதாகத் தோன்றுகின்றன்.