வள்ளுவர் வணங்கிய கடவுள் 105
இரு வினை சேர் என்றும் பிரித்துக் காட்டுகிறோம்.
இரு என்றால் பெரிய என்றும், தங்கியிருக்கிற என்றும், இரண்டும் என்றும் பலபொருட்கள் உண்டு.
இரு வினை என்பது பெரிய காரியம். பெரிய என்பது உயர்ந்த என்பதனையும் குறிக் கும். இரு வினை என்பது, மனதில் தங்கி இருக்கின்ற நல்லவை என்றும் பொருள் கிடைக்கிறது.
இரு வினை என்கிறபோது, ஏற்படுகிற எண்ணம் ஒன்று. செய் கின்ற காரியம் இரண்டு என்று நாம் கொள்ளலாம்.
குருவின் கொள்கையாம் வலிமையான உடலை வளர்த்துக் கொள் என்கிற போது, வலிமையான, உறுதியான உண்மையான மனம் கிடைக்கிறது என்று கூறினோம்.
மனம் வலிமையானால் என்ன கிடைக்கும்?
மன் + அம் என்று பிரிகிற இந்தச் சொல்லுக்கு, அழகாக சிந்திப்பது என்று அர்த்தம். மனம் உள்ளவன் தான் மனிதன்.
மனம் போல் வாழ்வு என்பது ஒரு பழமொழி.
மனமது செம்மை யானால், மந்திரம் செபிக்க வேண்டாம் என்பதும் அகத் தியர் கூறுகிற ஒரு தந்திரமாகும்.
மனம்போல வாழ்வு எப்படி அமையும்? அதுவும்
வளமான நலமான வாழ்வு எப்படி அமையும் என்றும்
சிறிது ஆராய்வோம்.