பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


பல ஆயிரக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்து திசுக்கள் (Tissues) என்று உருவாகின்றன.

பல்லாயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உறுப்பாக (Organ) மாறுகின்றன.

பல உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு (மண்டலமாக) அமைப்பாக (System) மாறுகின்றன.

உதாரணமாக, சுவாச மண்டலம் என்றால் மூக்குக்குழி, குரல்வளை, மூச்சுக்குழல், நுரையீரல்கள் ஆகும். இது போல் நமது உடலில் ஒன்பது மண்டலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் விளக்கிக் கூறுகின்றார்கள்.

செல்களுக்கு சிறப்பாகத் தேவைப்படுவது, பிராண வாயு என்கிற உயிர்க் காற்றாகும். செல்களுக்கு தொடர்ந்து நிறைய காற்றும் உணவும் கிடைக்கிறபொழுது, செல்கள் நன்றாக செழித்து வளர்கின்றன. தேகமும் செழுமை அடைகிறது.

நாம் உடற்பயிற்சி செய்கிறபோது, நிறைய உயிர்க் காற்றை உள்ளே இழுத்து, நுரையீரல்களை நிரப்பிக் கொள்கிறோம் அல்லவா!

அதிலிருந்து உயிர்க் காற்றை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் கிரகித்துக் கொள்கின்றன. அதனால் இரத்த ஓட்டம் அடைகிறது. பிராணவாயு கலந்த இரத்தம் ஒவ்வொரு செல்லுக்கும் சென்று சேர்கிறது.