எதுவுமின்றி சரியான வட்டத்தைக் காட்டும் அளவுள்ளதாக அமைந்திருக்க வேண்டும்.
தட்டெறிதலுக்கான வட்டத்தின் உள் சுற்றளவு 8 அடி 2.5 அங்குலமாகும். வட்டத்தின் கனம், உயரம், வெள்ளைப் பூச்சு எறிகோணப் பரப்பு எல்லாம் இரும்புக் குண்டு வீசி எறிகின்ற வட்டத்தின் அமைப்பைப் போலத்தான்.
4. வேலெறிதல் (Javelin Throw)
வேலின் அமைப்பு, தலைப்பாகம் உலோகத் தினால் அமைந்து கூர்மையான நுனியுள்ளதாகவும், மத்திய பாகம் நூற்கயிற்றினால் பிடிப்புக்காகச் சுற்றப் பெற்றும், இறுதியில் வால் போன்ற அமைப்புள்ள நீண்ட பகுதியாகவும் அமைந்திருக்கிறது.
ஆண்கள் போட்டிக்காகப் பயன்படும் வேலின் நீளம் 8 அடி 10¼ அங்குலமும், 1 பவுண்டும் 12.218 அவுன்சு எடைகொண்டதாகவும், பெண்கள் போட்டிக் காகப் பயன்படும் வேலின் நீளம் 7 அடி 6½ அங்குலமும் 5,163 அவுன்சு எடை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
வேலின் தலைப்பாகம், கீழே விழுகின்ற போது தரையில் குத்திக் கொள்கின்ற தன்மைக்காக அமைக்கப் பெற்றிருக்கிறது.
எறியப்படுகின்ற வேலிய் புவியீர்ப்புத் தானத்தை சமநிலைப்படுத்துவதற்காகவே, வேலின் மையப் பகுதியிலேயே நூற் கயிறு சுற்றப் பட்டிருக்கிறது.