இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
5. அருகில் உலாவரும் ஆதவன்
கிண்ணால் காணமுடிகிறது. கருத்தால் உய்த்துணர முடிகிறது. காட்சியும் , களிப் புடனே பெறும் மாட்சியும், அளவற்ற ஆற்றல் மிகுந்த ஆட்சியும் கொண்ட அந்த சூரியனைப் போற்றி வணங்கி, முதலிடத்தில் வைத்ததன் நோக்கம் பயனைத் துய்த் திடத் தான். பாரெல்லாம் பெரும் வளத்துடன் வாழ்வை நடத்திடத்தான்.
கண்ணால் கண்டும் , கருத்தால் துதித்தும் , காதுகளால் செவி மடுத்தும், நேரே உரையாடியும், நெஞ் சினை நிலைநிறுத்த உதவியும், உடன் உறைகின்ற குருவைத் தான், இரண்டாவதாகச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார் வள்ளுவர்.
அறிவுள்ளவர்கள் அப்படித்தான் வாழ வேண்டும். அருகில் உள்ளவற்றிலிருந்து பெறுகிற பயன்களையே முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மிக அழகாகச் சொல்லுகிறார். அதனால் தான் அறிவை