உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I7

உயர்நிலையை வகிப்பவர். இப்பொழுது புரியும் ஏன் பாரதியார் அப்படிப் பாடினார் என்று.

வேதம் என்றால் அறிவு என்று அர்த்தம்.

வேதம் என்ற சொல், வித் என்று வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிதல் என்று பொருள். வேதம் என்றால் அறிவு, ஞானம்

என்றும் , சுருதி என்றும் கூறுவார்கள். அவற்றின் விளக்கங்களைப் பாருங்கள்.

அறிவுக்கு எட்டாத உண்மைகளை உணர்த்துவது வேதம்.

உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை, மக்களுக்கு மறைமுகமாக உணர்த்துவது மறை.

எழுதிப் படிக் கப் படாமல் , காதால் கேட் டு, பயிலப் பட்டது சுருதி. இது செவி வழிப் பாடமாக அமைவதால் எழுதாக் கிளவி என்றும் சொல்வார்கள் .

இப்படிப்பட்ட, வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற, மக்களை மக்களாக, மனிதர்களாக வாழச் செய்கிற அறிவுக் கருத்துக்களை அந்தணர்கள் ஏட்டில் எழுதித் தராமல் இருந்ததை எல்லாம், எளிதாகப் புரியும் வணிணம் வள்ளுவர் ஏட்டில் எழுதினார். பாட்டில் எழுதினார். இதை ஒரு தமிழ் வேதமாக மக்களுக்குக் காட் டினார். தமிழன்னைக்கு தனிப் பெரும் மகுடமாகக் குறளை சூட்டினார்.

இந்தக் கருத்துக்கள் என்னை எப்படி பாதித்தன? என்னென்ன போதித்தன? எவ்வாறு போதித்தன என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம்.