வள்ளுவர் வணங்கிய கடவுள 37
பெயரிட்டோ வடிவமைத் தோ, கடவுள் என்று யாராலும் கூறிவிடமுடியாது. ஒரு பெயரைத் தந்து, ஒர் உருவத் தை அளித்து விட் டால், நாம் நம் முடைய அறிவை, கடவுளைப் பொருத்தவரை எல்லையிட்டுக் கொள்கிறோம் என்றாகிவிடும்.
கடவுள் என்பவர் எங்கும் வியாபித்திருப்பவர். எல்லாவற்றையும் கடந்தவர். என்று வேதங்கள் இப்படி வியாக்கியானம் அளித்திருக்கின்றன.
இந்த மூவருக்கும் சேர்த்துதான் கடவுள் வாழ்த்துப் பாடப் பட்டது என்று பலர் கூறுகின்றார்கள். கடவுள் என்பதற்கு குரு என்பது முதல் அர்த்தம் என்று முதலில் கூறியிருந்தோம்.
குருவே பிரம் மா ஆவார். குருவே விஷ்ணு, குருவே சிவம். குருவே மேலான இறைவன். இது வேதத்தில் கூறப்படும் சுலோகமாகும்.
‘குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர்தேவோ மகேஸ்வர:
குருஸ் சாட்சாத் பரம்பிரம்ம தஸ்மை நீ குருவே நம”
குருவே மேலான இறைவன் என்பது தமிழர் கொள்கையாக மட்டுமல்ல, சகலரின் சாத்திரமாகவும் இருந்து வந்திருக்கிறது.
அதனால்தான், குருவின் பெருமை, கடவுளரின் பெருமைகளை விட, பெரியதாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது.
அப் படியென்றால், குருவின் பெருமையைப் பற்றியும் நாம் மேலும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
குரு என்பது சமஸ்கிருதச் சொல். அதை கு