டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
72
கொள்வது. உயர்த்திக் கொள்வது என்ற பயனை, மிகவும் பக்குவமாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
குருவினை மனமார ஏற்றுக் கொள்வதுதான், கற்றவர் காணும் நற் பயன். கல்லாதவர்கள் எல்லோரும் குருவை வியந்து பார்ப்பார்கள். விதந்து பேசுவார்கள். அருகில் செல்ல அஞ் சுவார்கள். உரையாடப் பயப்படுவார்கள். கோயில் முன்னே சென்று, துரத் தே நின்று, வணங் குவதைப் போல, கல்லாதவர்கள் செல் வார்கள் என்ற ஒரு சூழ் நிலையையும், இந்தக் கற்றதன் பயன் என்ற வார்த்தை குறித்துக் காட்டுகிறது.
கற்றதனால் பெற்ற அறிவு, குருவை அறிந்து கொள்கிற ஆற்றலையும், குருவோடு உடனிருக்கும் துணிவையும், கூறுகிற அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும் அளிக்கிறது.
ஆகவே, தன் எதிர்கால வாழ்வினை ஒளிமயமாக்க வல்ல, பேரறிவாளராகத் திகழும் குருவினது, அரிய பெரிய முயற்சிகள் மிகுந்த நல் லாற்றல் மிக்கத் திருவடிகளைத் தொழுது நடந்து, உயர்ந்து மிளிர்வதே கற்ற கல்வியின் பயன் என்று வள்ளுவர் கூறுகிறார்.
சகல சக்திகளையும் தந்து காப்பது சூரியன் என்று முதல் குறளில் பாடினார் வள்ளுவர்.
உயிர் காக்கும் பிராண வாயுவை, தாவரங்கள் மூலமாக, உற்பத் தி செய்து தருவது, காரிருளாகக் கவ் விக் கிடக்கும் இருளை விரட்டி, பகலைத் தந்து உலகில் அழகை வெளிப்படுத்துவது. மனிதர்களைத் தாக்கும் நச்சுக் கிருமிகளை விரட்டியும் மாய்த்தும் மனித குலத்திற்கு நல்வாழ்வை நல்குவது. அத்துடன்