88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
4. வெறி என்பது, தான் கொண்ட ஆசையை, தணித்துக் கொள்ள முயலாமல், எந்த வழியிலாவது பெற்றே ஆக வேண்டும் என்று புலியாகப் பாயும் பேராசை. கொலை புரியும் கொடுரத் தாண்டவம் ஆட வைக்கும் கொடிய ஆசை.
ஆக, ஒருவரின் மனமதில் முளைக் கின்ற அவாவின் முதல் நிலையைத் தான் குருவானவர் விருப்பம் வராமலேயே தடுத்து நிறுத் தி விடுகிறார் என்பதாக, இதன் பொருள் வருகிறது.
வேண்டாமை என்றால் , வெறுப்பு என்பது பொருளாகும். வேண்டாமை எனும் வெறுப்பு வந்து விட்டால், வேண்டலர் என்கிற பகைவர்கள் தோன்றக் காரணமே இல்லாமல் போகிறது.
வெறுப்பு வரக் காரணம் என்ன? அப்படி என்ன மக்கள் மீது ஆத்திரம்? அந்த சூழ்நிலையையும், நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தல் நல்லது.
திருவள்ளுவர் தந்திருக்கும் இரண்டு குறள்களை நாம் கொஞ்சம் ஆய்வு செய்து பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
‘பிறப் பென்னும் பேதமை நீங்கச் சிறப் பென்னும்
செம் பொருள் காண்பது அறிவு”. (358) ஒருவனின் பிறப்புடன் சேர்ந்த இணக்கமின்மை (அறியாமை) நீங்க, உண்மைப்பொருளைக் கொண்டு
அவனுக்கு சிறப்பு அளிக்க முயல்வது அறிவு என்பது இதன் பொருளாகும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செப் தொழில் வேற்றுமை யான் ‘ (972)