வள்ளுவர் வணங்கிய கடவுள் II.3
ஐம்புலன்களை நாய் என்றனர், பேய் என்றனர், மாடு என்றனர், குரங்கு என்றனர், பாம்பு என்றனர், ஆனை என்றனர், காக்கை என்றனர், ஆமை என்றனர்.
‘நாய் போற் பொறிகளை நானாவிதம் விட்டோர் பேயரென்றே ஊது குழல் கோனே’
என்றும்; ‘கட்டாத நாயெல்லாம் காவலுக்கு எப்போதும்
கிட்டா வென்று ஊது குழல் கோனே’
என்றும் இடைக் காட் டுச் சித்தர், ஐம் புலன்களை
நாய்க்கு ஒப்பிடுகிறார்.
நாகம் என்றும் அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார்.
ஐந்து பொறிவழி போய் அலையும் இந்தப்
பாழ் மனம் , அந்த மனமென்னும் மாடு என்று பத்திரகிரி சித்தர் பாடுகிறார்.
இந்த உடம்பை ஆறு என்றும், உடம்பில் உள்ள ஐம் புலன்களை முதலை யென்றும் உருவகித்து,
ஆற்றிலே அஞ்சு முதலை யடி என்று கொங் கண நாயனார் எனும் சித்தர் அஞ்சிப்பாடுகிறார்.
‘பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
(திருமந்திரம் 2153)
ஊசி என்றால் பொறி. பை என்றால் தோல் பையான தேகம். விருகம் என்றால் காக்கை. காக்கையின் குணம் தந்திரம் என்றும்; திருட்டுத்தனம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.