உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் IO3

இப் படிப் பட்ட தீய சூழ் நிலையைத் தோற்றுவிக்கும், இருள் மனத் தில் தோன்றுவன எல்லாமே பேராசைப் பற்று, காமகுரோதம், கொலைச்

செயல் வெறி.

இந்த மூன்று தீக்குணங்களான பேய்க் குணங்கள் வந்து விட்டால், அவற்றின் வாரிசுகளாக வளையம் வருபவை. பொய் பேசுதல் , புறம் சொல்லுதல் , கோபப் படுதல் , பய னிலா காரியங்களைப் பண்ணுதல்.

இவை மனத் தின் கண் தோன்றுகிற மாய் மலங்களான தீய எண்ணங்கள், அவற்றைத் தொடர்ந்து மேற் கொள்கிற மோசமான செயல்கள் தாம் கொலை, களவு, காமம் என்பவை.

இங்கே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும்.

செயல் என்றால் என்ன? வினை என்றால் என்ன?

செயல் என்றால், செய்யப்படுகிற ஒரு செயல், அதற்கான விளைவுகள், அப் பொழுதே நடந்து, எழுந்து, முடிந்து போய் விடுவது. அந்தச் செயல் முடிவுற்ற பிறகு, மீண்டும் அதைப் பற்றிய நினைவுகள் இல்லாமல் போகும். அல்லது வந்த விளைவுகள் தொடராமல் போகும்.

வினை என்பது அப்படி அல்ல.

ஒரு காரியத்தைச் செய்யும் போது ஏற்படுகிற விளைவானது, அது நன்மையோ தீமையோ, செய்தவருடன் தொடர்ந்து வரும் அல்லது செய்யப்பட்டவருக்கு வரும்.

இதைத் தான், முற் பகல் செய் யின் பிற் பகல்