பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேவல வயதிரேகம்

கொடி மரம்


4) மருட் கேவலம்: அறிவை மறைத்து மயக்கத்தைச் செய்வது. ஆணவத்தோடு கூடி அறிவின்றிக் கிடக்கும் அனாதி கேவலம்.

5) விஞ்ஞான கேவலம் : விஞ்ஞான கலருக்குரியது. அனாதி கேவ லத்திலிருந்து நீங்கி, உடம்பு பெற்றுச் சங்கரிக்கப்பட்ட பின்னர்ப் புதுப்படைப்புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக்கும். அப்பொழுது, அவ்விடத்தில் மாயை கன்மங்களோடு பொருந்தாது, ஆணவத்தோடு மட்டும் கூடிப்படுவது.

கேவல வயதிரேகம் (கி) - தனி எதிர்மறை. இதிலுள்ள 5 உறுப்புகளாவன. 1) மேற்கோள் 2) ஏது 3) எடுத்துக்காட்டு 4) உபநயம் 5) முடிவு.


விளக்கம்

1) இம்மலையில் புகை இல்லை - மேற்கோள்.

2) தீ இன்மையால் ஏது.

3) எங்கே தீ இல்லையோ அங்கே புகை இல்லை நீரோடையைப் போல் எடுத்துக்காட்டு.

4) இங்கே தீ இல்லை - உபநயம்

5) எனவே, இங்கே புகையுண்டு - முடிவு. ஒ. கேவல அன்வயம்.

கேழல் - பன்றி.

கை

கைக்கிளை - அகத்தினை ஏழிலும், ஏழுவகைப் பண்களிலும்

கைம்மழுவன்-போரில் தருகாவன முனிவர்கள் சினமடைந்து தன்னை அழிக்கவிட்ட பரசைத் தானே கருவியாக எப்பொழுதும் கொண்ட சிவன். எ-டு மெய்ம்மையாய் நின்று விளங்கினான். கைம்மழுவன் (நெவிது 105)

கைமுதிக நியாயம் - பூனைக்கு அஞ்சுபவன் புலிக்கு அஞ்சான் என்று சொல்லத்தேவை இல்லை. இது ஒரு நெறி. "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல்"என்னும்திருக் குறள் சிறந்த எடுத்துக்காட்டு.

கைவரை - கையளவு, சிறிய அளவு.

கொ

கொங்கணவர் - 18 சித்தர்களில் ஒருவர்.

கொச்சமை - அறியாமை, எ-டு அச்சமும் அணுகாகக் கொச்சமை என்னோ (சநி 6).

கொட்ட-1) வாத்தியங்கள் முழங்க, ஊற்ற,

கொடிக்கவி-14மெய்கண்டநூல் களில் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம் கொடிப் பெருமை கூறுவது.

கொடி காட்டும் எழுத்து-1) அஞ்செழுத்து நமசிவாய 2) ஆறு எழுத்து ஒம் நமசிவாய3) எட்டு எழுத்து ஒம் ஆம் அவ்வும் சிவாய நம 4) நால் எழுத்து - ஒம் சிவாய 5) பிஞ்சு எழுத்து வகாரம் ஆகிய பராசத்தி 6) பெரு வெழுத்து சிகாரம் ஆகிய சிவம்7) பேசா எழுத்து - சிகாரம் சிவம் 8) பேசும் எழுத்து வகாரம் ஆகிய சத்தி.

கொடி மரம் - அசுரர்களை அகற்றவும் தேவர்களைப் பாது காக்கவும் கோயிலில் அமைந் துள்ளமரம்.

99