உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்பாரில்லை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கள் நிலைமையின் உண்மையை உணர முடியாதவர்கள் ,உணர விரும்பாதவர்கள் உணரத் திறனிருந்தும் தெரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் வாழ்வின் ஏற்றத் , தாழ்வுகளுக்கு, குறைகளுக்கு, கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாவற்றுக்குமே கடவுள், அதிர்ஷ்ட ம், பாப புண்ணிய கர்மவினைகளே பொறுப்பு என்று நம்பி , தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் சிந்திக்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை : எல்லாம் :தங்க ளில் சிலர் செய்கிற வினைதான் எல்லோர் வாழ்வையும் பாதிக்கிறது. பிறந்ததிலிருந்தே தாய்ப்பாலோடு சேர்த்தே புக ட்டப்படுகிற பழைய நம்பிக்கைகள், அர்த்தமற்ற ,தேவையற்ற சம்பிரதாய எண்ணங்கள் சமூக மக்களின் உள்ளத்திலே பனிமலையாக உறைந்து கிடக் கின்றன. அவர்களை முன்னேற விடாமல் முட்டுச்கட்டைகளாக ,விலங்குகளாகத் திகழ்கின்றன, சுயநலமிகளின் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் சுரண்டல்களையும் ஏனென்று கேட்பாரில்லை .அநேகமாக

அறிகிறவர்களில் பலர் "தெய்வம் கேட்கும் ', ‘அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் "என்று பழமொழிகளைக் கொண்டு . வேலிகட்டி ஒதுங்கி விடவே தயாராக இருப்பார்கள் கடவுள்-அப்படி ஒருவன் இருந்தால்- யாரையும் எதற்காகவேனும் எப்பொழுதாவது கேட்டு விட்டதாகக் தெரியவில்லை. சிந்தனையாளன் இங்கர்சல் சரியாகச் சொன்னான். யுகம். யுகமாக வலியவர்கள் எளியோரை வதை புரிந்து வருகிறார்கள் .மனித இதயமற்றவர்களும் குள்ள நரித்த னத்தின ரும் சாதார ணமாணவர்களையும் ஒன்றுமறியாத அப்பாவி மக்களையும் தாம் விரித்த வலைகளில் சிக்கவைத்து அடிமைகளாக்கி வருகிறார்கள். அவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/8&oldid=1395175" இலிருந்து மீள்விக்கப்பட்டது