வல்லிக்கண்ணன் 35 கண்ணும், மாட்டுப் பல்லும், மொட்டைத் தலையும்னு உனக்குத் தோணுவதைச் சொல்லி விடு!” பேபி சிரித்தாள்: 'நான் எப்பவுமே அப்படித்தான் லார், என் மனசில் உள்ளதைச் சொல்லி விடுவேன். ஒரு தாத்தா வருவார். அவர் மீசை ஆட்டுக் கொம்பு மாதிரி இருக்கும். அதை அவரிடமே சொல்லிப் போட்டேன். வேறொரு மாமாவுக்கு தொந்தி வயிறு.... இதென்ன, நீங்க பிள்ளையாரு மாதிரி இருக்கிறீங்க; குறைத்துச் சாப்பிடப் படாதோ என்று கேட்டேன்....” 'நல்ல காரியம் செய்தே, பேபி” என்று அவன் பாராட்டினான். 'பெரியவங்க என்னை வாயாடி, போக்கிரி என்று சொல்றாங்களே!” என்று குறை கூறினாள் அவள். 'உண்மையைச் சொல்றவங்களை இப்படித்தான் ஏசுவார்கள். அதற்குப் பயந்து தான் முக்கால் வாசிப்பேர் உள்ளதை உள்ளபடி சொல்வதற்குத் தயங்குகிறார்கள்.” நான் பயப்படவே மாட்டேன்' என்று திட மாக அறிவித்தாள் பேபி. 'பேஷ் துணிச்சல்காரி!' என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான் மாதவன். இந்த முறைகள் பலவும் சிறிது சிறிதாகத் தம் வேலையை நிறைவேற்றும் என்பதை அவன் உள்ளம் தெரிந்து கொண்டது. 'எனக்கு அவசரம் எதுவுமில்லை. யார் எதற்காக அவசரப்பட வேண்டும்? என்று எண்ணி னான் அவன்.
பக்கம்:துணிந்தவன்.pdf/47
Appearance