பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

இதைத் தெளிவாக உணர்ந்தவர் திரு. மணவை முஸ்தபா. அறிவியல் கருத்தைத் தமிழில் தர முடியுமா? மாணவர்களின் அறிவியல் பயிற்சி மொழியாகும் தகுதி தமிழுக்கு உண்டா? இருப்பினும் பயன்படுமா? என்றெல்லாம் ஐயுறவு எழுப்பியவர் கட்கெல்லாம்-தகுந்த விடை அளித்தவர் அவர்.

"தமிழில் எந்தத் (அறிவியல்) துறைச் செய்தியையும், சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் கூற முடியும். எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்துக்களையும், தெளிவாகவும் திட்பமாகவும் சொல்ல முடியும். ஏனெனில் தமிழ் கடந்தகால மொழி மட்டுமல்ல; நிகழ்கால மொழியுமாகும்; ஆற்றல்மிக்க எதிர்கால மொழியுமாகும். இன்று முதல் தமிழில் எதையும் கூற முடியும் என்பதை வெறும் சொல்லால் அல்ல; செயலால் நிரூபிப்பதே என் வாழ்வின ஒரே இலட்சியம், குறிக்கோள்' என்று ஒரு மேடையில் திரு. முஸ்தபா கூறிய உறுதிமொழியைச் செயற்படுத்திக் காட்டவே தன்னை முழுவதுமாய் அப்பணிக்கே ஒப்படைத்துக் கொண்டுள்ளவர் அவர்.

எந்தப் பொருள் குறித்த சொல்லாயினும் மக்கள் வழக்கில் இடம்பெற்று அப்பொருளைக் குறிக்கும் ஒரே சொல்லாக இது நிலை பெறுவதைப் பொறுத்தே ஒரே சொல்லாக அமையலாகும்.

சைக்கிள் - ஈருருளி, மிதிவணடி எனவும், பிளசர் கார் - மகிழுந்து, சீருந்து எனவும், பஸ் - பேருந்து, பயணி உந்து எனவும, டிரெயின - தொடர்வண்டி - நீராவி வண்டி எனவும், ஏரோபிளேன் - விமானம், வானூர்தி எனவும்

வழங்குவது போன்ற நிலை இடைக்காலத்தே தொடர்வது இயல்பே. மலேசியாவிலும் சிங்கையிலும் பெட்ரோல் பம்பு எண்ணெய்க்கடை என்றும், டிபன் சாப்பிட்டீர்களா எனறு கேட்கப்படும் காலைச் சிற்றுணவைக் குறிக்கும் வகையில் 'பசியாறியாச்சா' என்றும் கேட்கின்றனர். இது வழக்காற்றலால் ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்தும் திறன். பெறுவதைக் காட்டும். தமிழகத்தில் எணணெய்க் கடை, உணவுக்கு வேண்டிய எண்ணெய்களை விற்கும் இடத்தையே குறிக்கும். மேலும் கெரசின் 'மண்ணெண்ணை’ என்று வழங்குவது போன்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் தமிழில் தனிச்சொல் அமையவில்லை.