பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

மாயின. இவைகளை ஆங்கிலச் சொல் என்றோ, செர்மானியச் சொல் என்றோ, சப்பானியச் சொல் என்றோ சொல்லிவிட முடியாது. ஒல்வொரு புதிய கண்டுபிடிப்பையும் யார் முதலில் உலகுக்கு வழங்குகிறார்களோ அவர்கள் அவைகளை விளக்க உருவாக்கிய சொற்களை உலகம் ஏற்றுக் கொள்ள வேணடும். கண்டுபிடிப்புக்களுக்கு எப்படி அவர்களைச் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறோமோ அதைப்போலவே அவர்கள் உருவாக்கிய சொற்களும் அவர்களுடைய படைப்புக்களே. அந்தச் சொற்களை அறிவியல் மக்கள் சமுதாயம்-உலகப் பொதுச் சொற்களாகத்தான கருத வேண்டும்" என்பதே அந்த அம்மையார் தந்த விளக்கம். இந்த முறையில் 'வைரஸ், "லேசர்,' "பெனிசிலின்," "மார்ஃபின்' போனற பல சொற்களை நாம் அப்படியே பயனபடுத்தினாலும்கூட ஒரு அறிவியல மருத்துலக் களஞ்சியத்தில் அந்த சொற்கள் உருவாகிய அடிப்படை வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதும்போதுதான அதன பொருளும் விளக்கமும் முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும,

சோதனைக் குழாய், புதை சாக்கடை, கட்டி, கரப்பான், புற்று, காசம, ஈளை, இருமல் போன்ற பல சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருக்கின்றன. இப்படி ஏற்கனவே வழக்கில் இருக்கும சொற்களை இன்றும் அறிவியல கருததுக்களை எடுத்தியம்பும்போது பயன்படுத்துகிறோம். இவை தவிர, முன் பழக்கத்தில் இருந்து மறைந்துபோன சில தமிழ் அறிவியற் சொற்களைக் கண்டுபிடித்து மறுபடியும் அவற்றிற்குப் புத்துயிரூட்டி பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். திரு மணவை முஸ்தபா அவர்கள் இந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைநதிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும. "Slough” என்றால், “பொருக்கு,” “Desquamation’ என்றால் 'செதிளுதிர்வு' என்று மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொற்களைப் பயன்படுத்தும் முறையைச் சுட்டியிருக்கிறார்கள்.

இது தவிர பழைய சித்த மருததுவ நூல்களில் உடலுறுப்புகளையும் நோய் வகை மருததுவ முறைகள போன்றவற்றைச் கட்டுவதற்கும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நாடி, நரம்பு. நாளம், நோய் என்று பல சொற்களை நாம் எடுத்தாள்கிறோம். அதைப் போலவே இன்னும் பல சொற்கள் இருக்கக் கூடும். சித்த மருத்துவர்களும், தமிழறிஞர்களும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தமிழ்-ஆங்கில (சித்த) மருத்துவ அகராதியைத் தயாரித்தால் அது நமக்குப் பெரும் பயனளிக்கும். மறைந்த தமிழ் மருத்துவ அறிவியற் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.