பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

அண்ணாவின் கொள்கை வழித்தாக்கம் அறிவியல் சிந்தனையைத் தமிழில் வளர்ப்பதிலும் அவரை முனைந்திடச் செய்தது.

அவரது குறிக்கோளுக்குக் 'கூரியர்' பொறுப்பு நல்வாய்ப் பாயிற்று. கூரியர் வளர்ச்சிக்கு அவரது தொண்டு நல்வாய்ப் பாயிற்று. இந்த இஸ்லாமியத் தமிழர், தமிழிலும் தேர்ச்சி பெற்றதன்றி, அடிப்படை வடமொழிப் பயிற்சியும் பெற்றவராவார். எம்மொழிப் பயிற்சியும் எத்துறை அறிவும் திறமையும் எல்லாம் எந்தாய்மொழி தமிழின் ஆக்கத்திற்கே எனும் திண்மையர் அவர். "நான நிறையப் படிக்கிறேன், படித்தவைகளைப் பற்றி ஆழச் சிந்திக்கிறேன். அவை என் மனதில் அப்படியே படிந்து விடுகின்றன. எழுதும்போது அவையெல்லாம் அப்படியே என் எழுததில் பதிகின்றன" என்று தன் எழுத்துத் திறமையை ஐயுற்ற ஆசிரியருக்கு மாணவர் முஸ்தபா கூறிய பதில 'விளையும் பயிர் முளையிலே' தந்த காட்சி. 'விளைந்த பயிர் முதிர்விலே' அதன் பயனை உலகு பாராட்டுகிறது.

பேச்சும் எழுத்துமாக மாந்தர் எண்ணத்தை வெளியிட ஏதுவாகும தலைசிறந்த கருவி மொழி. அவ்வகையில் மனித உணர்வுகளை, பண்பாடுகளை, ஒழுக்க நெறிகளை, உயர் சிந்தனையை வெளியிடுவதற்கு முழு ஆற்றல் பெற்ற நிறை மொழியாக விளங்குவதே செந்தமிழ். தமிழ்மொழி பேசி வாழ்ந்துவரும் மக்கள நாகரிக வளர்ச்சியும் அறிவியல் சார்நத முயறசிகளிலும் மேம்பட்டு விளங்கிய காலம் வரையில், அவர்தம் மொழியும் அதற்கேறற சொற்களையும் கண்டு வளம் பெற்று வந்துள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின வாழ்வில் சமய வழிப்பட்ட சிந்தனையும் புராணக் கற்பனையுமே மேம்பட்டு நின்றதால், உலகியல் வாழ்விலும் அறிவியல் எண்ண வளர்ச்சியிலும பின்தங்கி விட்டனராதலின், தமிழ்மொழியும அறிவியல் துறையில் புத்தாக்கம் பெறும் வாய்ப்பிழந்தது. ஆங்கில நாட்டவர் ஆட்சியின விளைவாக நமது மக்கள் பயில நேரிட்ட ஆங்கிலமே மேல்நாடுகளில் வியத்தகு வளாசசி பெற்றுவந்த அறிவியல் கருத்துககளை நாமறிய வாய்தததொரு வாயிலாக அமைந்தது. நமமைப் பொறுத்த வரையில் ஆங்கிலமே புத்துலக அறிவியல் ஒளி வழங்கிய பல கணியாகும்.

எழுத்தறிவு பெறாத மக்கள் பெரும்பான்மையினராக இருந்த நிலையிலும், ஏட்டறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம பெற முடியாத வறுமைச் சூழலிலும்-அறிவியல் கருத்துக்