பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

227


வலதுகாலை முன்புறமாகத் தூக்கியிருக்க, இடது காலால் நொண்டியடி.

23)இடுப்பில் கைகளை வைத்து நில்

1.முழங்கால்களை அரை அளவு மடித்து நில் (Half knee bend)

2.முழங்கால்களை முழு அளவு மடித்துக் குந்து.

3.முன்மாதிரியே நில்.

4.கால்களை நிமிர்த்தி இயல்பாக நிமிர்ந்து நில்.


24)1.கைகளை முன் புறமாக நீட்டி, முழங்கால்களை முழுவதுமாக மடித்துக் குந்து.

2.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, குதிகால் உயர, முன் காலால் நில்.